வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1597!
சிவதர்சனி இராகவன்
சுவிஷ்

எண்ணக்கருக்கள்!

தோன்றும் வேகம் தோன்றி
மறையும்
தோன்றிய போதே பதிக்கச் சொல்லும்
கருவாய் மெல்லக் கருத்தில் மின்னும்
கடுகதி வண்டியாய் நகர்ந்து செல்லும்!!

மின்னல் வேகம் மீளாத் தூரம்
மூளைச் சன்னலின் ஓரம் வந்தும்
கருத்து ஒன்றைக் காவி வந்து
கண்களில் ஒளியை ஊட்டி வெல்லும்!!

செயலின் வடிவம் சேவை நோக்கம்
புயலின் கையில் இறக்கை போலும்
முயற்சி கொண்டார் முன்னே செல்ல
தயக்கம் விலக்கித் தருணம் ஈயும்!!

சிந்தனை ஆற்றல் சீரிய முயற்சி
சிந்தை தாங்கும் கருவின் குழந்தை
விஞ்ஞானத் தாய்க்கு விடியல் கூட்டி
விளையும் ஆற்றல் எண்ணக் கருவே!!
சிவதர்சனி இராகவன்
16/3/2022