வியாழன் கவி 1593!
உன்னதமே உன்னதமாய்!!
உயிர்ப்பினைத் தரும் உன்னதமே
தாய்மை
உணர்வினில் கலந்த அற்புதமே
அதன் மேன்மை
படைத்தலின் பணி சுமந்த பாரின்
தண்மை
தடைகள் தகர்த்தெறியும் உயர்வின்
மேன்மை!!
அன்பும் அறமும் கொடையும் கோட்பாடுகளும்
முன் சென்று முடிக்கும் முயற்சியாய்
வெடிக்கும் நாளும்
பன்முக ஆளுமை தன்னிகரில்லாத்
தோழமை
யாவிலும் உன்னதம் உயர்வு தன்னலம் மறந்த சிறப்பு!!
உன்னதமே நம் கண்முன்னே நடமாடும் தாயாய்
உறவாடி மகிழும் மகவாய் சோதரியாய் சொந்தமாய்
மருத்துவராய்த் தாதியயாய்த் தாங்கும் பாத்திரங்கள்
மகத்துவம் சுமந்த மாதுக்கள் மாந்தர்கள் பெண்ணிலைகள்!!
துரும்பெனக் கிடைக்கும் எதனையும் பற்றித்
துடுப்பென பற்றித் துணிவையும் கொண்டால்
பெற்றிடும் வெற்றி பெருமையும் சாற்றி
சரிதத்தில் பக்கங்களை அழகுறச் சொந்தமாக்குவோம்!!
சிவதர்சனி இராகவன்
10/3/2022