பூக்கட்டும் புன்னகை!!
வியாழன் கவி 1575!
யுத்தம் என்னும் கொடிய அரக்கன்
சத்தமிட்டு உயிர் பறித்தான் அன்று
நித்தம் ஒரு துயர் வந்து இங்கே
பித்துப் பிடித்தே ஆட்டுது பாரீர்!!
விழிகளுக்குள்ளே விடியல் காணா
விந்தை மனிதர் எண்ணம் மாற்றி
கொடிய தொற்று ஆளுகைக்கு
கொடுப்போம் ஒரு முற்றுப் புள்ளி!!
வறுமையென்றும் வாடும் உயிர்கள்
வல்லமை கொண்டே எழ வேண்டும்
கை ஏந்திப் பிழைத்தல் கனதியல்ல
கடமை செய்துவென்றிடசெய்வோம்!
பொறாமை என்னும் மேக மூட்டம்
மேனி தழுவி வாழ்ந்தது போதும்
பெருமை நாடிப் பொழுதை ஆக்கிப்
பெறுவோம் புன்னகைத் தோட்டம்!!
பூக்கட்டும் எங்கும்புன்னகை பூக்கள்
புவியாழட்டும் மெல்லினப் பாக்கள்
தழைத்தோங்கட்டும் தலைமுறைத்
துளிர்ப்புகள்
தந்தேகுங்கள் தன்னலமில்லாப் புன்னகை பூக்கள்!!
சிவதர்சனி இராகவன்
2/2/2022❤️