வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1571!
மீண்டு வருக!!

வெண்திரை மேகம் வான்விட்டு வந்ததோ
வெண்துகிலாகித் தருக்களின்
மேனி மூட!!
கண்திரை வியந்து நோக்கக்
கனிந்த காட்சி
மண்ணுயிர் வாங்கி வந்த வரமெனத்
தோன்றுதோ!!

தைமகள் மெல்லத் தளர்ச்சி காண்கிறாள்
மனதைத் தைத்துமே விடையது
கூற முயல்கிறாள்
எத்தனை எண்ணங்கள் இங்கே
செயலாகக் காத்திருக்க
என்னிதயக் கூட்டில் கருவொன்று
கண்விழித்திருக்கும்!!

செல்லரித்த ஏடுகள் போக மீதம்
உள்ளன
காலத்துக்கேற்றவை தங்க மீதம்
வான்மீகத்துக்கிரையாக,
அன்று சிற்றம்பலத்தான் முன்றலில்
ஏடுகள் கைவந்தன
இன்று எத்தனை பாடுகள் பட்டே
நாம் சேர்த்த!!!

அத்தனை ஒளி நாடாப்பதிவுகள் யார்கண் பட்டதோ
சுட்டவை போக மீதமேனும் நம்
கைவருமா
பாமுகப் பெட்டகத்தில் தலைமுறை
காக்கப் பூத்தவை
புனிதமாய்க் காத்தவை நம் முன் மீளத்தோன்றுமா!!
சிவதர்சனி இராகவன்
26/1/2022