வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி1568!
கொண்டாட்டக் கோலங்கள்!

தினமும் சுமைகள் மேகக்கூட்டமாய்
திறந்த வெளிச் சிறைபோல் வாழ்வு
முறைகள் தம்மை மாற்றி அமைக்க
முளைத்தெழுந்த கொண்டாட்டக்
கோலங்கள்!!

அகத்தில் பாய்ச்சும் அகல் ஒளியாய்
அகன்ற திரையில் வரைந்த கோலம்
நிகழும் செயலை மாற்றி யமைத்து
நித்தம் மகிழ்வைப் பூக்க வைக்கும்!

தையில் காணும் ஆரம்பப் புள்ளி
அழகிய சுழற்சியில் நெழிவுகள் காண
அகன்று போகும் வாழ்வியல் நொடி
ஆக்கித் தருமே எத்தனை கொண்டாட்டம்!

மகிழ்வு ஒன்றே மண்ணில் நிலைக்க
மனங்களின் மன்றில் ஏற்றும் விளக்கு
பிறந்த நாளாய் திருமண நாளாய்
தித்திக்க வருமே கோல எழிலாய்!!
சிவதர்சனி இராகவன்
20/1/2022