வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1564!!

உழைப்பின் வெகுமதி!

ஏர் பின்னது உலகு என்றானது
ஏரதை மறந்து மண்ணானது
மண்ணுக்குள் விளைச்சல் கொண்டானது
மனிதன் உழைப்பு மறந்ததனால்
பசி பட்டிணி மரணம் என்றானது!

கல்வியில்லா மனிதனிடம் கருணை கொண்டாடுது
கற்ற மனிதனால் சுய நலம் தலைதூக்குது
மனம் திண்டாடுது மகிழ்வு தடுமாறுது
நோய் தொற்று வென்றாடுது!!

உழைப்பைப் போற்றிய காலம்
ஊரும் உலகும் வாழ்வாங்கு வாழ்ந்தது
உழைப்பை மதியாது மிதித்த போது
உணர்வு துன்பப்பட்டே மதியிழந்து போகுது!

தை மகளை வரவேற்று அன்று
தைத்திரு நாள் உதித்துக்கொண்டது
உழவன் உழைப்பைப் போற்றி
உலகம் தலை சாய்த்தது!!

உழவை மறந்து கனவில் மிதந்து
கணினி யுகத்தில் வீழ்ந்த மனிதன்
பசியை ஆற்றப் பலதை ஆக்க
விஞ்ஞானம் கற்றுக் கொடுத்தது
செயற்கை அழிவைத் தந்து போகுது!
சிவதர்சனி இராகவன்
13/1/2022