வியாழன் கவிதை

சிவதர்சனி இரா

வியாழன் கவி -1768!

(தந்தன தானா தந்தன தானா தந்தன தானானே!!)

நாடு விட்டு நாடு வந்து
நல்லதொரு வாழ்வமைத்தோம்
தாய்மொழியில் சந்ததியை
வாழவைக்க பாடுபட்டோம்!!
(தந்தன தானா!!)

தாய் மொழியில் பேரும் வச்சு
தமிழ் பாட்டும் சொல்லி தந்து
காலமெல்லாம் பாடுபட்டோம்
செல்லக்கண்ணு
இது நம்ம கடமை என்றுணர்ந்தோம்
செல்லக்கண்ணு!!

பேரு வச்சால் போதாது
ஊரு மெச்ச வாழோணும்
உன் கடமை முடியவில்லை செல்லம்மா
உழைத்து நீயும் முன்னேறு போதுமா!!
(தந்தன தானா!!)

உனக்குள்ளும் திறமை
உண்டு
உயர்த்தி வைக்க
வேணும் அடி செல்லம்மா
இல்லே ஓரங்கட்டி
போடுவாங்க புரியுதா
உலகம் ரொம்ப சுய நலமாம்
அறியம்மா!!
(தந்தன தானே!!)
சிவதர்சனி இராகவன்
22/2/2023