வியாழன் கவிதை

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1739!
மாற்றங்களை ஏற்றிடு!

மாற்றம் என்பது
நிலைக்க
மனமே நீ மாற்றங்களை
ஏற்றிடு!!

சாற்றிடும் வெற்றியின்
படிகளாய் அவை
தினம் உன் கண் முன்
மின்னும் மிளிரும்!

நமக்கான வேளை இது
தக்க பயிரிடும் நாளை
நமக்காய்ப் பரிசளிக்க
காலம் தந்த கணிப்பு இது!!

மாறிடவே மாட்டோம்
என மனதுக்குள் சபதம்
போட்டே வாழ்வதில்
ஏது பலாபலன்?!

உண்மை கண்டு
உணர்ந்தால் உரிய
யாவருக்கும் சொல்லிவிடு
இது அனுபவ வாழ்வியல்
என்றே ஆகிட!!

சிவதர்சனி இராகவன்
15/12/2022