வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1795!
சித்திரை வந்தாலே!

சித்திரையில் புத்திரன்
பிறப்பது சிறப்பல்ல
என்ற பழமை மொழி- மாறி
சித்திரையில் பிறந்தால்
முத்திரை பதிப்பர்
என்றவொரு புது அல்ல
பொது மொழி தோன்றலாச்சு!

சித்திரைப் புத்தாண்டின்
சீரிய நினைவுகளும்
சிந்தைக்குள் நின்றாடும் நினைவுகளின்
நிழல்களும் மகிழ்வூட்டும்!

இயற்கையின் அழகும்
இறைத்த வாழ்வின்
நம்பிக்கை வரங்களும்
விழிப்பின் நிகழ்வுகளும்
நம்பிக்கை ஒளியென
நம்மை வழிப்படுத்தும்!!
சிவதர்சனி இராகவன்
13/4/2023