வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1781!

ஆண்டுகள் இருபதொடு மூன்று!

இல்லற பந்தத்தின்
இணைந்த அகவைகள்
இருபதொடு மூன்று
இனிதே நிறைந்தது!

மங்கலத்தின் நாணினை
மங்கை என் கழுத்தில்
இட்ட நன்னாள்
நினைவினில் வந்து
நின்றே பாடுது!

மனைவி என்ற
மாண்பணிந்து
துணைவி என்னும்
பெயர் தரித்து
இணைவு கண்ட
இரு உளங்கள்
ஒருமனதாய் ஆனதே
மகிழ்வும் பூத்ததே!
சிவதர்சனி இராகவன்
6/4/2023