வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1943..

அடுத்து தொடுத்து..
அடுத்து தொடுத்து
அலையலையாய் எழும்
எத்தனை நிகழ்வுகள்
பாமுகப் பந்தலில்
அழகியல் சிலதாய்
அறிவியல் பலதாய்
ஆளுமை ஊற்றாய்
அகத்தின் சாரலாய்
இணைகிற பொழுதினில்
இயக்கமும் தொடருதே..

சிவனுக்கு இராத்திரியும்
சிறந்த கவியோட்டத்தின்
இராணியாய் எங்கள்
கோசல்யா நினைவுடனும்
எழுச்சிப் பெண்ணின
முன் மாதிரியும் மெல்ல
மரபினில் நூறுமாய்த்
தொடரும் தொடுப்புகள்
தொடட்டும் உச்சமே…!
சிவதர்சனி இராகவன்
6/3/2024