வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1930..

காதலின் வீதியில்

பூக்களும் புன்னகையும்
பாக்களும் பலகவியும்
தேக்கமாய்த் தேனதாய்த்
தாவியே பலர் மனத்தில்
ஊக்கமாய் உணர்வுமாய்த்
தாக்கமாய்த் தவிப்புமாய்ப்
பூக்குமே காதலின் வீதியில்..

கண்டவரும் கொண்டவரும்
கலந்தவரும் பகிர்ந்தவரும்
சேர்ந்தவரும் பிரிந்தவரும்
செந்தணலாய்த் தகித்தவரும்
வாழ்ந்தவரும் வரலாறானவரும்
ஈந்தவரும் இறுமாந்தவரும்
இணைந்தவரும் கலந்தவரும்
கரைந்தவரும் காதலின் வீதியில்..
சிவதர்சனி இராகவன்
8/2/2024