வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1776!
நிமிர்வின் சுவடுகள்!

வேரூன்றி வையகத்தில்
விழுதெறிய வைத்தவர்கள்
வாழ்காலம் யாவிலுமே
பிள்ளைகளுக்காய் பயன்கொடுத்தவர்
உழுத நிலத்து விளைச்சலென
உந்து சக்கி ஆனவர்
முதுமையிலும் இயன்றவரை
அன்பை அள்ளித் தருபவர்!!

பிரிவு என்னும் விதிக்குள்ளே
அமிழ்ந்தே போயினும்
நினைவாக வந்து நிதம்
முத்தமிட்டு செல்பவர்!!

அப்பா அம்மா வாழ்வியலின்
சுவடுகள் நம் பாதைகள்
அனுபவித்துப் பயன்பெறவே ஆக்கிய நல் அனுபவ நூல்கள்!!
சிவதர்சனி இராகவன்

8/3/2023