வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1907!

மனிதத்தின் நேயமே…!

இனிதென வாய்த்த புவியிடை
வாழ்வினில் என்றுமே
புனிதமாய் வாழ்ந்திட வாய்த்த
வரமே மனித நேயம்
உயிர்களை உயர்வாய் உன்னத
நிலையாய் எண்ணி
உறவென மேவிட வேண்டுமே
நம்மிடை மனித நேயம்…

அன்னை தெரேசா போன்றதொரு
அகிலத்தின் தாய்மை
பின்னைப் பிறவியிலும் நின்றே
நிலைத்திட வைக்கும்
இன்னொரு பிறப்பு இனியும்
வேண்டாம் மனிதா மனிதம்
அன்பொடு காத்து அரவணைக்க
வேண்டுவது மனிதத்தின் நேயமே..
சிவதர்சனி இராகவன்
7/12/2023