வியாழன் கவி 1901❤️
காலத்தின் மடியில்…!
காலத்தின் மடியில்
வெற்றுக் காகிதங்கள் அல்ல
கவிதைகள் ஆகின்றோம்
கோலத்தின் எழிலில்
முதுமையாய் அல்ல
முயற்சியால் உயருகின்றோம்!
வான்மேக அழுகையின்
வார்ப்புகளால் நனைவோம்
வணங்காது துதி பாடாது
நியாயங்களாய் நிமிர்வோம்
அ நீதிகளின் அகத்தினில்
ஆட்படாது நியாயமாவோம்…!
கண்களைத் திறந்தே காணும்
கனவுகள் அல்ல இவை
இலக்கு ஒன்றின் தொடுகை
கலக்கம் தவிர்த்துக்
காவியங்களாவோம் நாம்…!
சிவதர்சனி இராகவன்
16/11/2023