வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

தன்னானானே தன்னானானே
தன தனனானானே தன்னானானே
தன்னானே தன்னானானே தன
தனனானானே தன்னானானே!

புழுதி வாரிச் சொரியுமந்த
மண்ணின் வாசம் பேசுதையா
பாடல் ஒன்று பாடச் சொல்லிப் பாமுகமும் கேட்டதையா!!

மாடி மேலே மாடி கட்டி
கோடி கோடி உழைக்கும்
மச்சான்
கூடி மகிழ நேரம் இல்லை
என்ன கொடுமை
சொல்லும் ஐயா!!

காசு பணத்தை தேடித்
தானே நாம
கடலுங்கடந்து இங்க
வந்தோம்
நம்ம சந்ததியை வாழ
வைக்க
ஓடி உழைச்சா தப்பு
என்ன
அதில் கேள்வி என்ன
சொல்லு இங்கே!

தப்பு என்ன நான் சொல்ல
நம்ம சந்ததியும் நல்லா
இல்லை
பாச நேசம் புரியுதில்ல
நம்ம பண்பாட்டை மதிக்குதில்ல
நல்ல சோறு கறியும் தின்னுதில்லை!!

கேள்வி மேல கேள்வி
கேட்கும்
என் பொண்டாட்டி கொஞ்சம்
நில்லு
காலம் இப்போ மாறிப்போச்சு
நாம மாறிக்கிட்டா தப்பு என்ன?
சிவதர்சனி இராகவன்
15/2/2023