வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை 1862!

எழுத்தறிவு இல்லையெனில்!

பெற்றவர் நமக்களிக்கும் பெருஞ்செல்வம் கல்வியன்றோ
பெற்ற பயன் நா நிலத்தில்
கண் திறக்கும் கல்விதானே
சிந்திக்க முடிந்த மிருகந்தான்
மனிதனென்று
சிறப்பான ஓர்மனிதன் உரைத்த செய்தி நாமறிவோம்!

கற்றலும் கற்றபடி நடத்தலுமே கடமையென்று
பெற்றகல்வி பெரு நன்மை தந்துவிடும்
நிச வாழ்வில்
உழைத்திடவும் ஊர்முன்னே தலை நிமிர்ந்து வாழ்ந்திடவும்
எழுத்தறிவு வேண்டுமென்று பள்ளிசென்று கற்றவர் நாம்..!

பட்டறிவு போதுமென்று பாரினிலே சிலருண்டு
பயன்கொடுக்கும் கல்வியது பல நன்மை தருவதாலே
இயன்றவரை பெற்றிடுவோம் இனிவரும் சந்ததியின்
நிலைதனையும் கற்றிட வைத்து உயர்த்திடுவோம்..!

எழுத்தறிவு இல்லையெனில் இருள் தானே வாழ்வுதானும்
பழுதாகும் பக்குவமும் ஏமாற்றி ஓடவைப்பார்
உலகினிலே ஆயிரமாய் எழுத்தறியா மனிதரிலே
பெண்ணினமும் தானுண்டு எழுகவே நீர் பெண்களுமே…!
சிவதர்சனி இராகவன்
6/9/2023