வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1830!

அகதி நாம் பெற்ற வரமா?…

ஆண்டுகள் ஒவ்வொன்றும் அழகாய்த்தான் கடக்குது
அதிலே ஒரு நாள்
அகதிகளை நினைக்க வைக்குது
அவரவர் பாடுகள் அவரவர்
கைகளிலே
ஆனால் அகதிகளின்
துயர்பாடு இன்னும்
தொடர்கின்ற சரித்திரச்
சகதியிலே!

நமக்குமட்டுமா என்றெண்ணிப் பார்த்தால்
நாடு நாடாய் அலையுதே மனிதம் அகதியெனும் நாமம் ஏந்தி
இவர் வாழ்வு சாபமா அல்லது
மனிதரே மனிதருக்கு அளிக்கும்
தண்டனைச் செருக்கா!

விடிவொன்று நாம் தேட விடையொன்று
கிட்டட்டும்
முடிவாகும் நம் காலத்தில் அகதியெனும் வார்த்தை வழக்கொளிந்து போக!!
சிவதர்சனி இராகவன்
21/6/2023