வியாழன் கவிதை

சிட்டுக்குருவியே!

நகுலா சிவநாதன்

சிட்டுக்குருவியே!

சின்ன அலகுப் குருவிநீயே
சிந்தை மகிழ வைக்கின்றாய்
பென்னம் பெரிய செயலாலே
பெருமை கூட்டிச் செல்கின்றாய்
இன்பம் தந்த உன்வாழ்க்கை
இதய வானில் சிறக்கிறதே
மென்மை பட்டு இறக்கையாலே
மேன்மை தொட்டுச் செல்கிறாய்

கதிரின் வீச்சு உனையழிக்க
காத்தி ருக்கும் காலமிதோ!
பதியை விட்டுப் பறந்திடவே
பாதை அமைத்து செல்கின்றாய்
வதியும் வாழ்வு வண்ணமாக
வளர்ந்து நீயும் செல்கையில்
கதியும் உனக்கு நேருகிறது
காலம் உன்னை அணைக்கிறது

பட்டு வண்ணச் சிறகாலே
பாதை அமைத்த வாழ்ந்திடுக!
எட்டும் வண்ண பறப்பாலே
என்னைக் கவரும் நல்சிட்டே
கட்டும் உந்தன் கூட்டினிலே
கனிவாய் முட்டை இட்டுநீயும்
துட்டு இல்லா வாழ்கின்றாய்
துணிவாய்ப் பறந்து திரிகிறாய்
நகுலா சிவநாதன் 1754