சந்தம் சிந்தும் கவிதை

சர்வேஸ்வரி சிவரூபன்

பள்ளிப் பருவம்
&&&&&&&&&&&&&&

பள்ளிக்கு
சென்றிடுவோம் பாடங்கள் கற்றிடுவோம் //
நல்வழியும் நடந்திடுவோம் நலமாக வாழ்ந்திடுவோம் //

கற்றவழியும் சிறந்திடும் காசினியும் வாழ்த்திடும் //
உண்மையும் துலங்கிடும் ஊக்கமும் ஊன்றிடும் //
உயர்வையும் தேடியே உறுதியும் எடுப்போம் //

தரனியிலும் நாமும் தளராது நிற்போம் //
தயக்கமும் இன்றியும் தனித்துவமும் தாழ்பதிக்க //

கனியும் பழமதுபோல் கற்கையையும் கவனிப்போம் //

விட்டிலிலும் விழமாட்டோம் பூச்சிகளாய் வீணாகவும் //

விரையமும் இல்லாது விழிப்புடனும் நோக்குவோம் //

இனியும் நாமும் இடரையும் வேண்டோம் //
துணியும் நிலைக்கும் துணிந்தே எழுவோம் //

பணியும் சிறக்கப் பாரிலேயும் நடப்போம் //

கவலையையும் விடுவோம் களிப்புடன் மகிழ்வோம் //

திகழுவோம் நாளும் திருந்திடுவோம் நன்றாய் //

சிவருபன் சர்வேஸ்வரி