சந்தம் சிந்தும் கவிதை

சர்வேஸ்வரி சிவரூபன்

பணம்
&&&&&&

பணமிருக்கு பணமிருக்கு வந்திடுங்கள் சாமி

குணமுமில்லை மணமுமில்லை கேட்டிடுங்கள் சாமி
பத்தும் செய்யும் பாரினிலெ பார்த்துக்கோடா சாமி

பத்தும் மறக்கும் பாசம் துறக்கும் பண்பும் பறக்கும் சாமி

எத்தன் கையில் சிக்கியபணம் எங்கிருக்கு சாமி
பித்தன் கைக்கு கிட்டாமல் அவனைப் பாடாய்படுத்துதே சாமி

வித்தைகாட்டும் மனிதன் முன்னே வேடிக்கையான பணமே
கத்தையாக நோட்டை வைத்து ஏங்குவார் பலர்கோடி

நாணயமான நாணயத்தை நாகாக்க செய்வாரில்லை

கூழும்கஞ்சியும் குடிப்பாரிடத்தே கொடுப்பார் யாருமில்லை

அடுக்கு மாடிக்கட்டிடங்கள் அழகாய் எழும்பும் சாமி

சுடக்குப் போட்டு நின்றுகொண்டே பேசும் திமிரைக்கேளு

கடக்குமாசை கொண்டு நின்றே அழிந்துபோவதைப் பாரு

கடமைநெறியைத் தவறியவர்க்கு பணமும் என்ன பணமோ

சர்வேஸ்வரி சிவருபன்