வியாழன் கவிதை

சர்வேஸ்வரி சிவருபன்

காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்..!

காற்றாலையசைகின்றது
காணங்கள் இசைக்கின்றது

காலத்தால் அழியாத சரிதைகளும் துலங்குகின்றது

உடனுக்குடன் உரிமையுடன்
உணர்வலையை மீட்டுகின்றாய்

உன்னதத் தொகுப்புக்களை பரப்பவும் வருகிறதே

காதினிலே கேட்டாலும்
கனிந்திடுமே மனமென்றும்

காசினியெங்குமே விரிந்தும் பரந்தும்
நின்றிசைக்குமே

சோம்பலையும் அகற்றுகின்றாய்
கவலைகளையும் தீர்த்தும் நிற்க்கின்றாயே

சோலைவனத்து வண்டினம்போல் ரீங்காரம் இடுகின்றாய்

தொழில் நுற்பச் சாதனையில் நீயுமோர்
தோழமையே

தேடியுன்னை வைத்திருந்தால்
நாளும்சேய்தி சொல்லிடுவாய்

காற்றின் வழி மொழியாளே வாழ்வினிக்க நின்றாயடி

கவிஞர்
சர்வேஸ்வரி சிவருபன்