சந்தம் சிந்தும் கவிதை

சர்வேஸ்வரி-க

காதல்

பூமியின் சுழற்சியில் காதலின் வசியம் …..
உயிர்களின் வருகை உலகத்தின் வேட்கை….
உணர்வுகளின் மூலம் காதலின்
கண்ணியம்…
பயனும் பகிர்வும்
காதலின் ஆளுமை…..
ஆக்கத்தின் ஊக்கமும் காதலின் ரசனை…..
பாயும் சக்தியாக
காந்த ஈர்ப்பு…
கபடமும் விகடமும் களையும் பயிராக…..காதல் தேசம் வண்ணமலர்களான பூஞ்சோலை …
வாழ்வியலில் நீந்தி மகிழும் ஆனந்த நதி….விழிகள் அகலவிரிக்க
விண்ணும் மண்ணும் வாழ்த்திமகிழ
காதல்களத்தினில் கள்ளமற்ற பதிவாக்கி புதுயுகம் படைத்திட கரம்
இணைத்திடுவீர்…..ஆக்கும் காதல்
காக்கும் நல்மனங்களே வாழ்க வாழ்க நீவீர் பல்லாண்டு…!உண்மையற்ற
காதல் சாதல் மேல்….
நன்றி…
சர்வேஸ்வரி- க