வியாழன் கவிதை

சர்வேஸ்வரி.க

கைக்குள் கையாய் கைத்தொலைபேசி…

சொல்லானதில்தொலைபேசி….
கைக்குள் செய்யும் காரியங்கள் கணக்கிலடங்கா…….கலியுக காலத்தின் ஓட்டத்தின் வேகம்….கைக்குள் கையாகி காட்டும் ஜாலங்கள் ……
விண்ணும் மண்ணும் தொட்டுவிட்ட விந்தை…. சொல்லிடா செல்லின் யுகம்
காலத்தால் மாற்றிடா சரிதமே……
தடுக்கில் கால்கள் தூக்கும்
தவ்வலுக்கும் தேவையொரு கைபேசி…இளஞ்சிட்டுகளின் கீறலின் கோலத்தில் மிளிரும் பலரகம் ….அகவை அரைநூற்றாண்டு காணும் அகத்தின் தேடலும் இங்கே…
வைரமாக பவளமாக நூற்றினை காணும் அப்பு ஆச்சியின் விடியலை விசாலமாக்கும்
சக்தியும் கைக்குள்ளே கையாய் கைத்தொலைபேசியே…..மானுடம்
வாழும் காலம் …..
யுகங்கள் பதியும்
சரிதத்தில் என்றுமே நீ வாழ்க…