பொங்கும் உளமே….தங்கும் தையே….
வீழ்ந்திடும் மனமே ஏணியாக அனுபவமே….
தாழ்ந்திடும் கரங்கள் ஓங்கிட
தடங்கல் அனுபவமே….
மங்கும் பொழுதுகள் மனதின் கற்பனையே…மகிழ்சி
பொங்கும் உளமே
இகழ்ச்சியோடுதாங்கும் எதையுமே…தையென மொட்டவிழ்ந்து இதழ்களாக பன்னிரண்டு
திங்களாகி…
பவ்வியமாக பகரும் இன்பதுன்ப பலகதைகளாக….
சுழற்சியில் மீண்டுமாய் தைமகள் தரணியிலே….
தாண்டும் கடவைகளாக …அஞ்சலோட்டம் தொடராக….
ஆக்கிவைத்த தைமகள் என்றுமே தரணியின் முதல்
மகளாக தங்கும் மனங்களில் பெரும் பேறே….
நன்றி