வியாழன் கவிதை

சர்வேஸ்வரி-கதிரித்தம்பி

புதுப்பெண்ணே நீ கொடுப்பது எதுவோ……!

பன்னிரண்டு வண்ணத் திங்களில் ….
நின் திருமுகம் காட்டும் ஜாலம் கணிப்பெதுவோ..

உனை வரவேற்கவே மண்ணில் பட்டாசு பூரிசு….
விண்ணில் அவை காட்டும் ஜாலங்களில் அகங்களின் பூரிப்பு….
பூப்பான உன்வருகை உணர்வை மீட்டும்
ஆனந்த கானம்….

வருக வருக வளமான வாழ்வு தருக தருக…
அழகான விடியலாக வாழ்தொலிக்குள்ளே இன்றுமட்டும் உனதாட்சி வேண்டாமே…..

நிதமுமாய் நிலையான தேகபுஸ்டி பலமாக…..
தீயசக்தி சச்சரவு தொலைய ….
சங்கடங்கள் சரிந்து பாதாளம் காணவே
ஆக்கிவைத்த புதுமைப் பெண்ணாக அகங்களில் நிலைத்திரு….

பூமித்தாயின் பொறுமைக்கு சோதனை வேண்டாம்….
கண்டுபிடிப்புக்கான களங்கமற்ற எண்ணங்கள் உருவாக எத்தனிப்பு….
தழைக்கும் தலைமுறையை தடம்போட்டு விழுத்தாது….
வார்த்தைகளில் நலவடிகால் அமைத்த திங்களாகிட….
பண்ணிய பண்பான பன்னிரண்டு திங்களில் புதுயுகம் உழுதநிலம் விளைச்சலில் பெருவெற்றியாகிட பதிவாக்கிய
புதுமைப் பெண்ணாக 2024ஐ வைரமாக
ஜொலிக்க வைத்திடு…

நன்றி வணக்கம்
சர்வேஸ்வரி-கதிரித்தம்பி