சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதலைப்பு
அப்பாஆசை தப்பானதே
அப்பா ஆசைப்பட்டதெல்லாம்
அன்பாய்
படையலிட்டோம்
தப்பாத மக்களாய்
தகப்பனுக்கு கடமையாய்
உள்ளத்தில் ஓராசை
உயிருடன் ஈழம்செல்ல
பிள்ளைகளே என்ஆயுள்
பின்நாளில் தாய்மண்ணென்றார்
உங்களின் ஆசையை
உறவுநாங்கள்
நிறைவேற்ற வில்லையப்பா
எங்களின் தாக்கமெல்லாம்
ஏக்கம்கொண்ட உங்கள்கனவப்பா
தாய்மண்ணே உன்னைதொட தவமிருந்தார் என்அப்பா
சேய்களுக்காய் வாழ்ந்தவர் சோதனைக்காலம்
பாரதமண்ணை
முத்தமிட்டார்
வேதனைக் கோலங்கள்
விடியாத இரவுகள்
சாதனை ஏதுமில்லை
சரித்தரம் கூறும்நாளை
குடும்ப உறவுகளின்
கூண்டுகிளிகள் நாங்கள்
அடுக்கடுக்காய் பிரிவுகள்
அன்னைநாட்டிலும்
அண்டைநாட்டலும்
அப்பா இறப்புவரை
அழகிய தேன்கூடுநாங்கள்
இப்படிநாமும் பிரிவோமோ
ஈழத்து அகதியாய்😭😭😭
நன்றி வணக்கம்
பண்புமிகு அண்ணா
கலாதேவி பத்மநாதன்
ஈழத்தமிழர் வளாகம் இந்தியா