சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனி சங்கர்

வணக்கம் ப.வை.அண்ணா!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு பசுமை!

சூரிய ஒளியால் சூழலில் பசுமை
பாரினில் வீழும் பனித்துளி பசுமை
மாரியில் கொட்டும் மழைத்துளி
ஏரியில் பூக்கும் ஆம்பல் பசுமை
சோலையின் காட்சி சொக்கவைக்கும் பசுமை
மாலையில் வானம் மனோரம்மியப் பசுமை
மலைகள் அருவிகள் மாபெரும் பசுமை(செல்வம்)
கலைகள் வளர்த்துக் காணலாம் பசுமை(நன்மை)
கோடையில் கொட்டிக் கிடக்கும் பசுமை
வாடையில் வீசும் காற்றும் பசுமை(குளிர்ச்சி)
கற்பக தருவின் கனியும் பசுமை (இனிமை)
அற்புதங்கள் ஏழும் அகிலத்தில் பசுமை (புதுமை)
கல்விக்கு உகந்த காலம் பசுமை(இளமை)
நல்வித்தை தந்தது நமக்குப் பசுமை(நன்மை)
நன்றி வணக்கம்!