சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
விடியல்!
(குறட்டாழிசை)
பகலது தொடரா பரிதியும் மறையும் /
நகருமே நாளும் நாளைய விடியலை/
நோக்கி நமக்குள் நொந்து போகா/
ஊக்கம் வேண்டும் உறுதி வேண்டும்/
காயம் இல்லா காலம் இல்லை
மாயம் ஏதும் மருந்தும் ஆகா/
ஏற்றம் இறக்கம் ஏற்றுக் கொண்டு/
மாற்றம் வேண்டும் மனத்தில் உறுதி/
கொண்டே வாழ்வில் கொள்கை உடனே/
விண்ணைத் தொடவே வீறு நடையும்/
வலிகள் தாங்கி வழியது தேடி/
கலியது நீக்கிக் களிப்புடன் வாழ/
முயற்சி ஒன்றே மூலதனம் ஆகுமே/
பயக்கும் நல்ல பயனும் அன்றோ/
அயற்சி கொள்ளா ஆற்றல் தருமே/
வியக்கத் தக்க விடியல் ஒன்று//

ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி! மிகுந்த வாழ்த்துகள்!
உங்களுடன் சேர்ந்து கவித்திறனாய்வு செய்யும் பாலரவி அவர்களுக்கும் மிகுந்த பாராட்டுகள்!
களம் தந்து உற்சாகப்படுத்தும் நடா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி!
தொழில்நுட்பத்தில் உதவிபுரியும் வாணி மோகன் அவர்களுக்கும் மிக்க நன்றி!