சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் !
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
மொழி!

அன்னை ஊட்டிய மொழி அமுதமொழி
ஆன்றோர் காட்டிய மொழி
ஆளுமை வளர்த்துவிட்ட மொழி
இல்லறம் சொல்லிய மொழி
ஈடிணையில்லா மொழி
ஈரடிஞானி உரைத்த மொழி
உள்ளம் பொங்க உணர்விலே ஊறிய மொழி
ஊர் எங்கும் ஒலிக்கும் மொழி
எங்கள் தமிழ் தேன்மதுரத்தமிழ்
எட்டுத்திக்கும் ஏற்றம் கண்டமொழி
ஐயம் திரிபறக் கற்றிடுவோம்
ஒழுக்கம் விருப்பம் தரும் என்றது தமிழ்மொழி
ஓங்கார தத்துவம் சொன்ன மொழி
ஔவையின் நாவில் ஔடதமாய் ஊறிய மொழி
அழியாது என் இதயமதில் நிறைந்த மொழி அழகுதமிழ் மொழியே!

ப.வை.அண்ணா உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள்!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி!