சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
மார்கழி!

ஐ ஐந்தும் ஐந்தும் (5×5 + 5 = 30) அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு
பூமிக்குப் பாரம் ஆனவர்கள்
சாமிக்குப் படைத்த திருப்பாவை
தந்த ஆண்டாள் நாச்சியாரும்
திருவாசகம் தந்த மணிவாசகரும்
ஆன்மீகம் நிறைந்த மார்கழி மாதத்தை
நிலைநிறைத்தும்.
பெருமை பெற்ற மார்கழி மாதம்
அருள் சுரக்கும்
ஆருத்ரா தரிசனம்
திருப்பள்ளியெழுச்சி
திருவெம்பாவை

ஆலயம் தோறும்
அலங்காரம் விளங்கும்
மாதவன் (கிருஷ்ணபகவான்)
சொல்கிறான் மார்கழிநான்
ஆதவன் வருகை தேவர்களின் காலை ஆரம்பம்
பீடுடை மாதம் மார்கழி
நாளடைவில் பீடைமாதமாய்ப் போச்சு

தேவர்களின் இரவுகழியும் மாதம்
தேவசிந்தனை தந்திடும் பயன்கள்
பாவங்கள் போக்கப் பாடிடும் பாக்கள்
பரவசம் பொங்கும் மார்கழி!

பாவங்கள் சுமந்த பரிசுத்தர்
பாலகனாய் பாரினில் பிறந்தநாள்
எங்கள் வீட்டுப் பாலன்
(சிவபாலன்- என் அண்ணன்)
பரமனின் பாதங்கள் அடைந்த நாள்
மார்கழி இருபத்தைந்து!
மனத்தினில் வலியும்
காத்திட மறைத்து
இனம்சனம் என்று
இங்கிதமாய்த்தான்
கழிந்திடும் மார்கழி!

நன்றி வணக்கம்!