சந்தம் சிந்தும் கவிதை

சக்தி. சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம் !
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு !
பிள்ளைக்கனியமுது
************************
இருமனம் இணைந்த இல்லற வாழ்வில்
பெரும்பேறாய்க் காதலின் சின்னமாய்க்
கிடைப்பது!
மருந்தாகும் பொக்கிஷம் மறுப்பதற்கில்லை
அருமருந்த பாக்கியம் அவரவர் வாழ்வில்
ஏனோ தடைப்பட்டு ஏக்கம் குடிகொள்ளும்
நானோ காத்திருந்தேன் நான்கு ஆண்டுகள்!
நெஞ்சம் கனத்து நெகிழ்ந்த தருணங்கள்
தஞ்சம் நீயே தாராயோ இறைவா
வரமொன்று கேட்கிறேன் வசந்தம் வீச
இரங்குவாய் எனக்கு இறைவா நீயும்
என்றே கண்ணீர் எந்நாளும் விட்டேன்
அன்புடன் எனக்காய் ஆண்டவனை வேண்டிய
உள்ளங்கள் அனைத்திற்கும் உளமார நன்றி
சொல்லி மகிழ்கிறேன் சொல்லொணா ஆனந்தம்//
தாய்மையின் நிறைவைத் தாங்கிய வேளை
சேய்அவன் உதரத்தில் செய்த குறும்புகள்
மனமோ நிறைந்தது மகிழ்ச்சிக் கடலில்
கனவுகள் கண்டேன் கனிஅமுதாய்ப் பிறந்திட்ட
பிள்ளைச் செல்வத்துடன் பின்னிப் பிணைந்திட
கொள்ளை இன்பம் கொண்டேன் நானும்//
நாட்கள் விரைவாய் நகர்ந்தன அன்றோ
காட்சியில் இன்றவன் கல்யாண நாயகன்
எனினும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்றன் பிள்ளைக்கனியமுதே //
ப வை. அண்ணா! உங்கள் பணி பாரிய பணி! பாராட்டுகள்!
திரு.திருமதி நடா மோகன் அவர்களுக்கும் நன்றி!
திறனாய்வு செய்யும் மதிமகன் அண்ணாவுக்கும் நன்றி!