சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
நிலவின் உலா
******************
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
பாரில் உள்ளோராக்குப் பந்தம் ஒன்று தந்தாயே
சொந்தம் என்றும் சொர்க்கம் என்றும்
அந்திவேளை அலையும் உன்னை
உணர்வுகொண்டு தூது அனுப்பிய
கணங்கள் எத்தனை காதலர் வடித்த
கவிகளில் நீயோ காவிய நாயகி
குவிந்திடுமே கரங்கள் குறையாய்நீ உலாவுகையில்
மூன்றாம் பிறையென்றால் மூத்தோர் சொல்வழி
ஆன்மீகம் நிறைந்திருந்தது ஆதரிப்பார் உன்னை
தேடி ஓடி வணங்கி தெய்வமாக்கி
கோடிஇன்பம் கண்டு கொள்ளும் உலகம்
நீலகண்டன் சடையினில் நீ தரித்து நிற்க
கோலம் கொண்டு கொடுத்து வைத்தாய்
முழுமதியாய் உலாவுகையில் முழுவுலகும் மகிழ்ந்திடுமே
அழுகின்ற குழந்தைகூட
ஆனந்தம் கொண்டிடுமே
ஊடல்கொண்ட உள்ளங்கள் உனைப்பார்த்துக்
கூடல் ஆகிக் குதூகலித்து ஆர்ப்பரிக்க
அழகி நீ அண்டமெங்கும் அலைகின்றாய் அயராமல்
உழைத்தேதான் ஆளுகின்ற மனிதர்களின் கலைவடிவம்
நிலையாக நிற்காமல்
நீண்ட உலா
மலைமீது ஏறிவா மல்லிகைப்பூ கொண்டுவா
மழலைகள் மயங்கிட மங்கைநீ உலாவுகின்றாய்
நிலாவே நிலமெங்கும் ஒளி வீசும் நிறைமதியே
உன் உலாவில் உல்லாசம் கொள்ளும் உலகம் இது!

நன்றி வணக்கம்.
ப.வை.அண்ணா உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள்!
திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கும் மிக்க நன்றி!