சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
கலவரம்
**********
கருத்துகள் முரண்படும் காரியம் தடைபடும்
செருக்குடன் இருப்பர் செய்வனே செய்யார்
அருவருக்கும் ஆட்சி ஆளணி நெறிமுறை
உருக்குலைய வைக்கும் உலகையே உலுப்பும்
கலகம் உண்டாக்கிக் கவிழ்த்துப் போடுவர்
அலசல் ஆயிரம் அவைகளில் அரங்கேறும்
விலகவும் மாட்டார் வீணிலே வாதமும்
சலனமும் நிறைந்து சமுகம் உடைபடும்
கவலையும் கொள்ளார் கலவரம் பெருகினும்
அவதிகள் பட்டே ஆண்டிகள் ஆகிடும்
மக்களைக் காத்திட மகேசனின் அருளே
இக்கணம் உறுதி
இயம்புவேன் நானே!

நன்றி வணக்கம்!