வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை!
விருப்புத் தலைப்பு!
நெஞ்சமெல்லாம் நீயே! ((குறட்டாழிசை)
மஞ்சள் குங்குமம் மனத்தினை நினைக்க
தஞ்சமும் தந்தாய் தாயென அணைத்தாய்
ஈருடல் ஓருயிர் ஆனதே உண்மை
பேருடன் வாழ்ந்து பாரினில் நிலைப்போம்
அன்பெனும் குடைக்குள் அணைதாய்
இன்பமும் துன்பமும் இருவரும் பகிர்ந்தோம்
புன்னனகைச் சோலையில் புதுமைகள் கண்டேன்
என்னுயிர் நீயே என்றுமே உண்மையே
இதயம் தேடும் இனிமை உறவே
நிதமும் உந்தன் நினைவுடன் வாழ்வேன்
பொறுமையின் சிகரமே பொருத்தமாய் வந்தாய்
நறுமணம் வீசும்
நல்லதோர் வாழ்வில்
நெஞ்சம் எல்லாம்
நிறைந்தே கிடக்கு
வஞ்சம் இல்லா
வாசம் உனதே!

கவிதைநேரத் தொகுப்பாளினிகட்கு மிகுந்த பாராட்டுகள்!
திரு.திருமதி. நடா மோகன் அவர்களுக்கு நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.