வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை
நிமிர்வின் சுவடுகள்!
அழகழகாய் விழுதுவிட்ட ஆலமரங்கள்
வழமான எம்வாழ்வின் வரப்பிரசாதங்கள் அவர்கள்
உளமாரப் போற்றுவோம் உத்தமர்கள் அவர்கள்
அளவாக ஆசைப்பட்டு ஆரோக்கியம் பேணியவர்கள்
தளர்வயதிலும் ஆளுமை தணியாது உழைத்தவர்கள்
விளக்குகளாய் இருந்து வெளிச்சம் தந்தவர்கள்
நிமிடம் கூட வீணாக்காது வாழ்ந்தவர்கள்
நிமிர்வின் சுவடுகளாய் நினைவில் இருப்பவர்கள்
எத்தனை எத்தனை ரத்தினங்கள்
இத்தரையில் வாழ்ந்த முன்னோர்கள்
கலங்கரை விளக்கைப் போல
கடமை செய்து
காலம் கடத்திய கண்மணிகள்
குலம் விளங்க நாளும் உழைத்து
பலம் குன்றி பருவம் மாறி
முதுகு வளைந்து முதுமை அடைந்த முத்துக்கள்
காலம் எல்லாம் கண்கலங்காது பாதுகாக்கவேண்டுமே நிமிர்வின் சுவடுகளை!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக. திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கும் நன்றிகூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!