வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
தலைப்பு: தமிழும் மரபும் (ஆசிரியப்பா)

புலமைக் கவிஞன் பாரதி தாசன்
பலமிகு வளமுறு பாடல் தந்தான்
இளமைக் குப்பால் இனிமைத் தமிழே
வளம்நிறறை வர்ணனை வரிகளில் வடித்தார்
கற்பனை கடந்த கவிதை நயமும்
அற்புதக் கருத்தும் உணர்வினைப் தட்டும்
உவமை உருவகம் அணியும் கலந்து
தவமும் தொன்மைகொள் தமிழ்மொழி நங்கை
இலக்கணம் என்னும் அணிகலன் அணிந்து
இலகுவில் விளங்க இனிமைத் பாக்கள்
துலங்கிடத் தருவாள் தரணியும் மகிழ
பலவகை மரபு பயின்று வந்தாள்
வல்லின மெல்லின வகையுறு இடையினம்
தொல்லுயிர் கூடித் தந்திடும் அட்சரம்
உயிர்மெய் எழுத்தாய் உருவம் பெற்றே
பயின்றிடும் சீர்கள் பாக்களில் சுவையுடன்
நேரசை நிலையை நாள்மலர் என்றே
ஓரை சுவைதனை நகையாய் அணிந்தே
எதுகை மோனை இயல்பாய் சேர்ந்தே
பொதுவாக புதுக்கவி படையலில் தோன்றி
தொடையாய் நடப்பாள் தளைகளும் வெண்பா
நடையிலே ஜொலிக்கும் நகையாய் நகர்ந்து
உலாவரும் மரபும் உணர்விலே இருக்க
பலாபலன் பெற்றே பகிர்வோம் நாமும்!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிக்க நன்றி! வாழ்த்துகள்!
திரு.திருமதி நடா மோகன் அவர்களுக்கும் மிகுந்த நன்றி!

நேற்று நாள் அறுபதாவது மரபுவகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.
ஆசிரியருக்கும் பாமுகத்திற்கும் மிக்க நன்றி கூறுகிறேன்.அனைத்துப் பயிலுனர்களுக்கும் பாராட்டுகள் கூறுகிறேன்.
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!