உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
வேண்டும் வலிமை!
அழகிய மலர்களே! அனைவரையும் அன்புடன்
ஆரத் தழுவுகிறேன் அன்னையாய் உங்கள்
வளமான வாழ்வுக்காய் வடிக்கிறேன் வரிகள்
வாழ்க்கை வாழ்வதற்கே வளமோடு நலமோடு
வாழ்ந்திட வேண்டும் வேண்டுகிறேன் வரங்கள் கிடைத்திடவே!
வாழ்க்கை என்ற மரத்திற்கு
வாழ்நாள் முழுவதும் உரமிடுவீர்
வலிமை என்றதோரர் உரம்வேண்டும்
வழிகள் பிறக்கும் வென்றிடுவீரே
தாழ்வாய் உம்மை எண்ணாது
தீட்டுவீர் திட்டம் எந்நாளும்
காழ்ப்புணர்ச்சி கொண்டோர் இருக்கட்டும்
காற்றிலே உதறிடுவீர் தூசியாய்
சூழ்நிலைகள் சரியில்லை என்றாலும்
சூறாவளியாய் பொங்கிஎழுந்தே எதிர்கொள்வீர்
ஏழ்பிறப்பும் வெற்றிகாண்பீர் உங்கள்
ஏற்றம்காணத் துடிக்கிறேன் எனினும்
ஆழ்மனதில் வேண்டும் வலிமை
அயராது உழைத்திடுவீர் அகிலம் போற்றுமே!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கும் வாணி மோகனுக்கும் மிகுந்த நன்றி கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!!