இனிய இரவுவணக்கம் திரு.நடா மோகன் அவர்களே
ப.வை.ஜெயபாலன் அவர்களே
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
அன்புதான் ஆளுகின்ற சக்தி!
அறுசீர் விருத்தம்!
இன்முகம் இல்லாதோர் பேச்சு
இருளது சூழ்ந்திடவே செய்யும்
அன்பிலார் எல்லோரும் தங்கள்
அறிவிலே தமக்குரியர் தாமே
வன்முறை விரட்டிவிடு வாகை
வந்துதான் சேரும்காண் வாழ்வில்
அன்புடை நெஞ்சம்கொள் மக்கள்
அனைவரும் அடிபணிவர் தாமே!
துடிப்புடன் இருக்கணுமே துட்டர்
தூரவே வைக்கணுமே நாங்கள்
நடிப்புடன் செயல்படாது நாவில்
நாணயம் கொள்ளத்தான் என்றும்
படிந்திட வைத்திடலாம் உள்ளம்
பகைகளைக் களைவதுதான் பண்பு
செடிகளும் உயிர்க்கிறதே அன்பில்
சேர்ந்துதான் வாழ்ந்திடுவோம் நாமே
நன்றி வணக்கம்!
ப.வை.அண்ணா உங்கள் பாரிய பணிக்கு மிகுந்த வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக!
திரு.நடா மோகன் அவர்களே ! உங்களுக்கும் மிகுந்த நன்றி!