சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு!
பட்டினி!
சோமாலியா மட்டும்தான் சோர்ந்து போனதா
கோமாளிக் கூத்துப் போடும் குறுகிய மனம்கொண்டவரினால்
ஏமாளியாய் எங்கள் மக்கள் ஏக்கம்
பசுமை நிறைந்த நாட்டில்
பசிபட்டினி வரக்காரணமானோர்
ஏசி அறைக்குள் ஏய்த்துப் பிழைக்கும் கூட்டமே
எண்ணிப்பார் குஞ்சுகுறுமன்
பஞ்சு மெத்தையா கேட்கிறது
பால்மாதானே கேட்கிறது
சருகாகிப்போகும் சந்ததிக்கு உள்ளம்
உருகமாட்டாயா உணர்வோடு எழுந்துவா
கருத்தொருமித்துக் களத்தில் இறங்கி
சுறுக்காய்த் தீர்க்க சூளுரை செய்திடு
இக்கணமே இக்கணமே உயிர்கள் சாகுதே!
தடைகளை அகற்றித் தயவுகாட்டு
படைகளை விரட்டு பஞ்சம் போக்கு!

நன்றி வணக்கம்!