சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
தமிழுக்கும் அமுதென்று பெயர்!
அறுசீர் விருத்தம்

வல்லினம் மில்லினர் இடையினம்
வகைகளும் கண்டது தமிழ்மொழி
பல்வகைப் பாக்களும் பாடினர்
பாமரர் விளங்கவும் செய்தனர்
தொல்பொருள் ஆய்விலே முதலிது
தோற்றமும் பெற்றதே தமிழ்மொழி
கொள்கையைக் குருதியில் கொண்டவன்
கொற்றவன் சபையிலே முதலிது!
தரணியில் தரமுடைத் தமிழ்மொழி
தந்திடும் இன்பமும் தேனது
பரணியும் பாடிட பக்தியே
பாரதி வள்ளுவன் பெருமையும்
உரமது தந்திடும் உத்தமர்
உயர்ந்தனர் உலகமும் அறியவே
வரமெனப் பெற்றது வாகையே
வாழ்த்துவோம் உலகெலாம் முழங்கவே!
இரத்தமும் ஆகும்? இல்லையே
அறம்செய விரும்பென அவ்வையும்
உரக்கவே சொன்னவள் அத்துடன்
ஊக்கமும் கைவிடேல் என்றவள்
சிரமமும் இல்லையே சிற்பமாய்
செந்தமிழ் வாழுமே என்றுமே
மரபினைக் கற்கவே மனங்களும்
மலருமே அமுதெனப் பருகவே!
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

ப.வை.அண்ணா! உங்கள் பாரிய பணிக்கு மிகுந்த வாழ்த்துகள். திரு.நடா மோகன் அவர்களுக்கு மிகுந்த நன்றி!