சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு!
பணி!
பிணியாய் இருந்த வேளையிலும்
பின்னிற்க மாட்டார் பெண்கள்
தணிக்கை செய்யாது தம்கடமை
துவண்டு விடாது தொடர்வர்
கனிவுடன் இருப்பர் குடும்பம்
கலைந்திடாது பணிந்தே இருப்பார்
பணிகள் பாரம் ஆனாலும்
பாடுபட்டே உழைத்திடுவர் பாரில்!
என்அன்னை அதிகாலை எந்நாளும்
உரைத்திடுவர் வாசகம் ஒன்று
என்பணி செய்து கிடப்பதே
என்றவாறே நகர்த்துவர் நாளினை
மன்னுயிர் ஆதரவுதேடி வந்தவேளையிலும்
மறுக்காது நைட்டிங்கேல் மாதிரி
மகோன்னத பணியாற்றி முன்மாதிரியாகத்
தன்னுயிர் பிரியும் வரையிலும்
தலைசிறந்த குடும்பத் தலைவியாய்ப்
பணியாற்றி பரமபதம் அடைந்தார்!
இறைபணி இன்பந்தரும் இவ்வையகத்தில்
நிறைவுடன் நெஞ்சம் நிம்மதியாகவும்
குறைவிலா துயிர்கள் வாழ
நேசமுடன் நேர்மையுடன் ஆற்றும்பணி
தேசத்தைக் கட்டியெழுப்பும்
செய்வன திருத்தச் செய்தால்
உய்யுமே உலகமும் தானே!

பாரிய பணி ஆற்றும் ப.வை அண்ணா
மிக்க நன்றி!.
பாமுகப் பணிப்பாளர் பணியும் பாரியாரின் பணியும் மெச்சக்தக்கது!
பெருநன்றி இருவருக்கும்!