சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
மகளிரைப் போற்றிடுவீர் மகளிரைப் போற்றிடுவீர்!
அறுசீர் விருத்தம்!
கற்கண்டாய்ப் பேசிடுவாள் மங்கை
கலாச்சாரம் காத்திடுவாள் கண்ணாய்
நற்குணங்கள் பேணிடுவாள் நங்கை
நல்லவைகள் போதிப்பாள் நன்றாய்
சுற்றத்தார் போற்றிடவே சிந்தை
செதுக்கிடுவாள் சாதுரியம் கொண்டே
பற்பலரும் புகழ்ந்திடவே பாரில்
பக்குவமாய் வாழ்ந்திடுவாள் என்றும்!
அருமையான பிறப்புத்தான் பெண்கள்
பெருமைகளும் கண்டிடுவாள் பேச்சில்
பண்புடனே நடந்திடுவாள் பூவில்
மருமகளாய் மறுவீடு சென்று
மற்றுமொரு தாயாகித் தன்னை
உருக்கியேதான் உழைத்திடுவாள் உண்மை
உரைத்திடுவாள் உயர்ந்திடவே இல்லம்!

அன்னையாக அண்ணியாக மாறி
அரவணைத்தே சென்றிடுவாள் என்றும்
இன்பத்தின் எல்லையிலா ஊற்றாய்
இன்னல்கள் சுமந்திடுவாள் தன்னுள்
வன்கொடுமை வாட்டுகின்ற வேளை
வனிதையவள் என்செய்வாள் பாவம்
பொன்னாக மதித்திடுவீர் பெண்ணை
போற்றிடுவீர் போற்றிடுவீர் நாளும்!

நன்றி ப.வை.அண்ணா உங்கள் பணி பாரியபணி! மிகுந்த வாழ்த்துகள்!
திரு.நடா மோகன் அவர்களே! உங்களுக்கும் மிகுந்த நன்றி!