சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
ஊக்கி!
கவிஞர் வாலியின் வரிகள்
ஊக்குவிப்பவர் ஊக்குவித்தால்
ஊக்குவிப்பவரும் தேக்கு விற்பர்
நாணயத்தின் இருக்கம் போலே
நம்மனம் பக்குவம் அடையும்
பிறர் மனம் உற்சாகம் அடையும் !
ஒருவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும்
பாராட்டும் இருகரங்களில் சேர்ந்த கரவொலியும்
உருவாக்கும் புதியதோர் அத்தியாயம்!
விழிகளில் வியப்புடன்
வழிமொழியும் வார்த்தைகளால்
மழலையின் மனச்சிறகு
மகிழ்ச்சி வானில் பறக்குமே
மனத்தில் வேர்விட்டு விண்தொட்டு வாகை சூட
வழி வகுக்குமே!
பிறர்க்கோர் இன்னுரை
முன்னுரையாக எழுச்சிப் படுத்துமே!
முறைகேடான ஊக்கிகளால்
குறைகூறும் அளவில் கறைபடிந்த மாணவமணிகள்
நிறைவான சாதனையாளர்களாக மாற
நல் ஊக்கிகளாக இருப்போம்!

என்று கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
ப.வ.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள்! திரு.நடா மோகன் அவர்களே! உற்சாகம் தரும் உங்களுக்கும் மிகுந்த நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்!
நன்றி வணக்கம்!