சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு !
கவித்தலைப்பு
காதல் என்றும் அழியாது!
எங்கோ பிறந்தேன் இங்கே வந்தேன்
எங்கோ பிறந்தாய் எனக்காய் இருந்தாய்
இன்னார்காகு இன்னாரென்று
எழுதி வைத்தான் இறைவன்
என்னதவம் செய்தார்கள் உன்றன் பெற்றோர்
உன்னைப் பெற்றதற்கு அதேதவம்
நானும் செய்தேன் உன்னை அடைவதற்கு
ஊனும் உயிரும் ஒன்றானோம் உணர்வுகள் பகிர்ந்தோம்
மானாகவந்த என்னை மன்னவனே நீஏற்றாய்
தேனாக இனிக்குதையா தென்றலாய் நீஇருக்க
கன்னல் போலே காதல் இனிக்க
மண்ணிலுள்ளே போகும் வரைக்கும்
காதல் என்றும் அழியாது!

ப.வை.அண்ணா மிக்க நன்றி உற்சாகத்திற்கும் தட்டிக்கொடுப்புக்கும் !
திரு.நடா மோகன் அவர்களே!
உங்களுக்கும் மிகுந்த நன்றி!
நன்றி வணக்கம்!