சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பரவசம்!
தாரம் ஆனது பரவசம்
தாய்மை அடைந்தது பரவசம்
தங்கமகனை அள்ளி அணைத்து
தாய்ப்பால் ஊட்டியதும்
ஆனந்தப் பரவசத்தில்
துள்ளியது என்மனம்!
தித்திக்கும் முத்தம் தந்து
அரும்பு மொழிபேசி
குறும்பு சேட்டை செய்து
கவலைகள் மறக்கவைத்தவன்
என் உலகம் என உருவானவன்
கனவுகளின் கருவானவன் கவிதைக்குப் பொருளானவன்
தாய்மையே பெண்மைக்கு பரவசம்!

நன்றி வணக்கம்!