வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

வியாழன் கவிதை
மாற்றத்தின் திறவுகோல்!
ஆண்டு தோறும் மாற்றம் வேண்டும்
அலட்டிக்கொளாகிறோம் அவாபடுகிறோம்
கூண்டுக்கிளி போல் அல்லாமல்
பூட்டுப்போட்ட நம் உள்ளத்தை
திறந்தே வெளிவருவோம்
ஆவன செய்தல் ஆளுமை வளர்த்தல்
எதுவும் இல்லா வாழ்வில்
எங்கே காண்போம் மாற்றம்?
எண்ணத்தில் உதித்து
உணர்வில் கலந்து
செயலாய் வடிவம் கொள்ளும்போது
மாற்றம் நிகழும்!
மாற்றத்தின் திறவுகோல் நாமே
மற்றவருக்காக மாறாமல்
நமக்காக மாறுவோம்!
எம்மை மாற்றுவோம்!
கற்றுக்கொள்ள நிறைய உண்டு
குற்றங்குறை காணாது
பற்றறுதலோடு வாழ்ந்து
சுற்றமும் இனிமையாய் வாழ்ந்திட
ஏற்றுங்கள் காண
மாற்றத்தின் திறவுகோல்களாக
மாறுவோம்!
நன்றி வணக்கம்!

கவிதைநேரத் தொகுப்பாளினிகளுக்கும்
வாணி மோகனுக்கும் மிக்க நன்றி!