சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
இலக்கு!
வாழ்க்கையில் முட்கள் இல்லா வழிகள் இல்லை
வெற்றியின் முகவரி யாரிடமும் இல்லை
நாம் முயன்றால் மட்டுமே
எட்டிப்பிடிக்க முடியும் இலக்கு!
தடைகளை உற்றுப் பார்க்காவிடின்
தானாய் வருமே உத்வேகம்
நடையில் நேர்மை வேண்டும்
நல்வழி கருத்தில் கொள்ளல் வேண்டும்
கடைசிவரை முயற்சி கைவிடாதிருத்தல் வேண்டும்
அடைந்திடலாமே இலக்கு நாம்!
கடந்து வந்த பாதை கல்லும் முள்ளும் நிறைந்திருந்தாலும்
நடந்து வந்த பாதையைத் திரும்பப்
பார்க்கும்போது
உழைப்பும் ஊக்கமும் முயற்சியும் பயிற்சியும் உள்ளம் பூரிக்க வைக்குமே!
விழுந்தாலும் எழுந்தேன்
இலக்கை அடைந்தேன்!

ப.வை.அண்ணா! உங்கள் சுட்டிக்காட்டலுக்கும் தட்டிக்கொடுப்புக்கும் மிக்க நன்றி!
திரு.நடா மோகன் அவர்களே!
உங்களுக்கும் மிக்க நன்றி !