வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம் !
வியாழன் கவிதை நேரம்
கவித் தலைப்பு
காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்
*******************
எதிரொலிக்கக் கண்டான் மார்க்கோனி
புதிய படைப்பினில் புத்தியைத் தீட்டினான்
அதிசயமாக உருவானது அவனிக்கு ஆனந்தமே//

தனிமையைப் போக்கிடும் சாதனம்
இனிமையை நிறைத்திடும் ஊடகம்
விந்தைகள் நிறைந்த விஞ்ஞான வளர்ச்சியில்
எந்த மூலையிலும் எதிரொலிக்கும் வகை
பந்தலாய் விரிந்தது பாமுகமாயய்ப் பரந்தது//
அருமருந்து சொல்லும் ஆரோக்கியமும் தருமே
உருவாக்கச் சொல்லும் உயர்வடையச் செய்யும்
ஆன்மீகம் வளர்க்க அனுதினமும் ஆர்வலர்கள்
தேன்தமிழ் சுவைசொட்டச் தேடுதலை நாடுவரே
சிறியவர் முதல் பெரியவர் வரை
அறிவிலே உயரவும் ஆற்றலை வளர்த்திடவும்
ஊற்றாகி நிற்கும் உன்னத ஊடகம்
போற்றிட வேண்டுமே பொழுதெல்லாம் நன்மையே//
மழலைகள் ஆரவாரம் மனத்தினை நிறைத்திடும்
பழங்களின் சவையன்ன பைந்தமிழ் மணம்வீச
கவிதைகள் படைத்திடும் கவிஞர்கள் ஆகக்
குவிந்திடுமே ஆக்கங்கள் குவலயம் வியக்கவே
எழுத்திலே முதலாய் ஏற்றத்தில் உச்சமாக
விழுதுகள் விட்டே வியாபித்த வானொலியாய்
காற்றிலே அலையாகிக் கலந்தாயே என்றும்
தோற்பதே இல்லை தொன்மைத் தமிழ் வாழுமே!

நன்றி வணக்கம்!