வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு!
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்!
பூர்வீகத் தமிழன் பெருஞ்செல்வம்
புத்தகங்கள் அன்றோ அறிவீரே
யார்அறிவார் கொடுமை நடக்குமென்று
நேர்வழியைக் காட்டும் நல்லவர்கள்
நெருப்பினாலே கொளுத்தி நாசமாக்க
பார்வியக்கும் வகையில் புகையாக
பாமரரும் கலங்கி நின்றனரே!
சித்தர்கள் எழுத்தில் உருவான
சிறப்பான ஓலை கள்சிதைந்து
முத்தான சொத்து முத்தமிழில்
முழுவதையும் எரித்து சாம்பரராக்கி
இத்தரையில் தமிழர் இல்லாமல்
ஒழித்திடவே ஓர்மம் கொண்டனரோ
புத்தபிரான் வழியில் தோன்றல்கள்
புதத்தியிலே மழுங்கிச் செய்தனரோ!
எத்தனைதான் இடர்கள் பட்டாலும்
எங்களாலும் முடியும் என்றிருந்தோம்
தத்தமது கடமை என்றுணர்ந்தே
தணியாத தாகம் கொண்டிருந்தோம்
எத்தனித்தோம் எஃறி உயர்ந்துகொண்டோம்
எல்லோரும் சேர்ந்தே உருவாக்கி
புத்தெழிலின் வனப்பில் பூத்திட்ட
புத்தகசா லையில் பெருமைகொண்டோம் !

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கும் திருதிருமதி .நடா மோகன் இருவருக்கும் மிக்க நன்றி!
அனைத்துக் கவிப் படைப் பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.